சர்வம் ஏ ஐ நிறுவனம் உருவாக்கிய புல் புல் வி3 குரல் மாதிரி வடிவமைப்பு.
சர்வம் ஏ ஐ நிறுவனம் உருவாக்கிய புல் புல் வி3 குரல் மாதிரி வடிவமைப்பு சேர்சிபிடி மற்றும் கூகுள் ஜெமினி போன்றவற்றை விட மிகச் சிறப்பாக செயல்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூரைச் சேர்ந்த இந்த நிறுவனம் ஒரு சோதனை முறையில் பல இந்திய மொழிகளில் புல் புல் வி3 மாதிரி மற்ற முன்னணி மாதிரிகளை விட அதிகமானோர் விரும்பும் ஒன்றாக வடிவமைத்துள்ளது. 8 khz(கே ஹெச் இசட்) சோதனைகளில் 11 லேப்ஸ் மற்றும் பிற உலகளாவிய போட்டியாளர்களை விட இது முதல் இடத்தில் உள்ளது. மேலும் குரல் வழி கண்டறிபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. சொற்களை தவிர்ப்பது அல்லது தவறாக உச்சரிப்பது போன்ற பிழைகள் இதில் மிக குறைவாக இருக்கிறது. தற்பொழுது இது 11 இந்திய மொழிகளில் 35க்கு மேற்பட்ட குரல்களை வழங்குகிறது .விரைவில் 22 மொழிகளுக்கும் இது விரிவுபடுத்தப்பட உள்ளது. சர்வதேச சேவைகளுடன் ஒப்பிடும்போது இந்திய மொழி தேவைகளுக்கு குறைந்த செலவில் பயன்படுத்தலாம். . சர்வம் நிறுவனத்தின் கூற்றுப்படி புல் புல் வி3 இந்தியச் சூழலுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
Tags :



















