சந்தேகத்தின் பேரில் மனைவியைக் கொன்ற கணவன்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. சீதாபூரைச் சேர்ந்த மோதிலால் சவுகானும், ரஜனியும் (24) கணவன்-மனைவி. மோதிலால் புதுபூர்வாவில் கொத்தனாராக வேலை செய்கிறார். தனது மனைவிக்கு மற்றவர்களுடன் திருமணத்திற்கு புறம்பான தொடர்பு இருப்பதாக மோதிலாலுக்கு சந்தேகம் இருந்துள்ளது. இதனால் இவர் திங்கள்கிழமை மனைவியுடன் தகராறு செய்துள்ளார். தொடர்ந்து, ஆத்திரமடைந்த அவர் மண்வெட்டியால் தாக்கினார். இதில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
Tags :