தூய சக்தி த வெ கவிற்கும் தீய சக்தி திமுகவிற்கும் இடையே தான் இன்னும் போட்டி-

by Admin / 01-06-2026 11:48:22pm
தூய சக்தி த வெ கவிற்கும் தீய சக்தி திமுகவிற்கும் இடையே தான் இன்னும் போட்டி-

 திருச்சியில் கிழக்குத் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் விஜய் கடந்த ஆண்டு இதே வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தேன் இப்பொழுது முதலமைச்சராக உங்கள் முன்னால் நிற்கிறேன் என்றும் நமது போட்டி இன்னும் முடிவடையவில்லை . தூய சக்தி தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தீய சக்தி திமுகவிற்கும் இடையே தான் இன்னும் போட்டியை எழுப்பி கொண்டிருப்பதாகவும் மற்ற கட்சிகள் எல்லாம் தீர்த்து போன கட்சி என்றும் விமர்சனம் செய்து இதோடு தேர்தல் முடிந்த ஐந்து நாட்களில் திமுகவும் அதிமுகவும் நம்மை ஆட்சி அமைக்க விடாமல் இருவரும் கூட்டு சேர்ந்து கொள்ளையடிப்பதற்கு ஆட்சியை அமைக்க முயற்சித்தார்கள். ஆனால் அதை எல்லாம் வென்று நாம் ஆட்சி அமைத்திருக்கிறோம் என்ன ஒன்று 108 தொகுதிகளைத்தால் நாம் வேண்டி இருக்கிறோம் இன்னும் கொஞ்சம் அதிகமாக கொடுத்திருந்தால் நம்மளுடைய நிலைமையே வேறாக இருக்கும் இருந்தாலும் பரவாயில்லை என்றும் இன்றும் நமக்கும் ஸ்டாலினுக்கும் தான் போட்டியை தவிர மற்ற இல்லாத கட்சி எல்லாம் நமக்கு போட்டி இல்லை. ஒரு தூய்மையான ஆட்சியை உங்களுக்காக நான் வணங்குவேன் என்றும் வந்த ஒரு மாதத்திற்கு குள்ளாக முடிந்த அளவு விவசாய கடனையும் இலவச மின்சாரத்தையும் வழங்கி உள்ளோம் இப்பொழுது திமுக 100 யூனிட் மின்சாரம் இலவசமாக கொடுக்கிறேன் என்று சொல்வது ஜெயலலிதா மேடத்தினுடைய ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டதே தவிர திமுக கொண்டு வந்தது கிடையாது. அதனால் நம்முடைய ஆட்சியில் படிப்படியாக முடிந்த அளவிற்கு ஒரு நல்ல ஆட்சியை தருவேன் என்றும் தெரிவித்தார். நான் கோட் சூட் போட்டு வருவதை விமர்சிக்கிறார்கள். கேலி பேசுகிறார்கள். கேலி பேசுபவர்கள் பேசிக்கொண்டே இருக்கட்டும் அவர்கள் பேசுவது மூலம் நாம் வெற்றி பெற்றுக் கொண்டே இருப்போம் என்கிற தொழில் பேசினார். இன்று நாம் இருக்கிறோம். நாளை இருப்போம் நாளை மறுநாளும் நாம் இருப்போம். இனி எப்பொழுதும் தமிழக வெற்றிக்கழக ஆட்சி தான் என்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களையும் என்னையும் பிரிக்க முடியாது. அவர்களோடு நான் இரண்டற கலந்து விட்டவன் என்றும் தெரிவித்தார்.. வருகிற இடைத் தேர்தலில் தமிழக வெற்றிக்காக வேட்பாளர் வெற்றி பெற செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையையும் வைத்தார்.

 

Tags :

Share via
Logo