தூத்துக்குடி ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளர் பணியிட நீக்கம்

by Admin / 01-06-2026 10:54:50am
தூத்துக்குடி ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளர் பணியிட நீக்கம்

தூத்துக்குடி ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியற்றி வந்தவர் தீலிபன். இவர் உதவி ஆய்வாளருக்கு வாட்ஸ் அப் மூலம் தவறான பாலியல் தகவல்களை பரிமாறியதாக சம்பந்தப்பட்ட பெண் உதவி ஆய்வாளர் புகார் அளித்திருந்த நிலையில், அவர் நெல்லை சேர்மாதேவிக்கு மாற்றப்பட்டு இருந்தார். இந்நிலையில், அவர் தான் தன்னோடு பணியாற்றக்கூடிய காவலர்கள், உதவி ஆய்வாளர்களை பெண் பிள்ளைகளை தன் பிள்ளைகளாக பாவிப்பதாக தன்னிலை விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். அவர் அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ் உண்மை என்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. அவரை பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo