தமிழக முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
இன்று மாலை 4.15 மணிக்கு திருச்சியில் உள்ள புனித வளனார் கல்லூரி மைதானத்தில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றார் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற நிலையில் ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற நிலையில், பெரம்பூர் தொகுதியை தக்க வைத்துக் கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நேரடியாக நன்றி தெரிவிக்கும் முகமாக இந்த சிறப்பு பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார். இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. க்யூ ஆர் கோடு அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை கவனத்தில் கொண்டு இந்த முறை பின்பற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் வருகையின் பொருட்டு பலத்த காவல்துறை பாதுகாப்பும் கண்காணிப்பும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது .
Tags :



















