அமைச்சருக்கு எதிரான மனு தள்ளுபடி

by Staff / 03-07-2024 04:43:05pm
அமைச்சருக்கு எதிரான மனு தள்ளுபடி

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறையின் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2001-2006-ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் திடீரென்று தங்களையும் அந்த வழக்கில் இணைக்கக் கோரி கடந்தாண்டு ஏப்ரலில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via