தொழிலதிபர் விஜய் மல்லையா திவால்:  லண்டன் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

by Editor / 27-07-2021 05:24:34pm
தொழிலதிபர் விஜய் மல்லையா திவால்:  லண்டன் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு



பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா (வயது 65). இவர் நடத்திய 'கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனத்திற்காக இந்தியாவைச் சேர்ந்த 13 வங்கிகளில் 9,000 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பினார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா, ஜாமினில் விடுவிக்கப் பட்டார். அவரை இந்தியா அழைத்து வரும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.


இந்நிலையில் விஜய் மல்லையாவுக்கு எதிராக திவால் உத்தரவு பிறப்பிக்கும்படி, அவருக்கு கடன் கொடுத்த, பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி, பெடரல் வங்கி, ஐடிபிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், யூகோ வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, ஜேஎம் பைனான்சியல் அசெட் ரிகன்ஸ்ட்ரக் ஷன் ஆகிய 13 நிதி நிறுவனங்கள் ஒருங்கிணைந்து பிரிட்டன் நீதிமன்றத்தில் மனு செய்தன. விசாரணையின் இறுதியில் மல்லையாவுக்கு எதிராக திவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் வாயிலாக மல்லையாவின் சொத்துக்களை முடக்கி, கொடுத்த கடன் தொகையை மீட்க, வங்கிகளுக்கு வாயப்பு கிடைத்துள்ளது. லண்டன் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் வழி வகுக்கிறது. ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதாக மல்லையா கூறிய நிலையில், அதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via