தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.58,280-க்கு விற்பனை.

by Editor / 08-11-2024 10:51:39am
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.58,280-க்கு விற்பனை.

ஏற்றமும் இரக்கமும் கொண்ட நிலையில் தினமும் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அக்டோபர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து வந்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்தது.
 சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.57,600-க்கு விற்பனை செய்யப்பட்ட  நிலையில்,  இன்று (நவ.8) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.7,285-க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.58,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.103க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


 

 

Tags : தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.58,280-க்கு விற்பனை

Share via