இறந்த கல்லூரி மாணவன் குடும்பத்திற்கு நவாஸ்கனி எம்பி சார்பில் நிதியுதவி ஆறுதல்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நீர்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் வாகன சோதனையின்போது நிற்காமல் சென்றதாக கூறி கீழத்தூவல் காவல் நிலையம் விசாரணைக்கு பின்னர் கல்லூரி மாணவன் மணிகண்டன் மர்மமான முறையில் இறந்தார்
மணிகண்டனின் இறப்பிற்கு நீதி விசாரணை அரசு வேலை ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மாணவனின் பெற்றோர் உறவினர்கள் தொடர்ந்து முன்வைத்து வரும் நிலையில்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி இறந்த கல்லூரி மாணவன் மணிகண்டன் கிராமத்திற்கு சென்று பெற்றோர் உறவினர்கள் ஆறுதல் தெரிவித்து 50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
Tags :