டங்ஸ்டன் ஏல உரிமத்தை ரத்து செய்க: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
டங்ஸ்டன் ஏல உரிமத்தை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அரிட்டாபட்டியில் சுரங்கத் தொழிலை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது.அரிட்டாபட்டியில் சுரங்க நடவடிக்கை மேற்கொண்டால் அது ஈடுசெய்ய முடியாத சேதங்களை ஏற்படுத்தும்.மக்கள்தொகை அதிகம் உள்ள கிராமங்களில் சுரங்கம் தோண்டுவது மக்களை பாதிக்கும்.வாழ்வாதாரம் பறிபோய் விடுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.இந்துஸ்தான் ஜிங் நிறுவனத்திற்கு வழங்கிய உரிமையை உடனே ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட மாநில அனுமதி இன்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் மத்திய அரசு சுரங்க உரிமம் வழங்கியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Tags : டங்ஸ்டன் ஏல உரிமத்தை ரத்து செய்க: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்