இரும்பு கூண்டு அறுந்து விழுந்து சிஇஓ பலி

ஐதராபாத்தில் நடந்த விழாவில் ஏற்பட்ட விபத்தில் விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ உயிரிழந்தார். விஸ்டெக்ஸ் ஏசியா நிறுவனத்தின் 25வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மேடைக்கு பிரமாண்டமாக எண்ட்ரி கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கிரேன் அறுந்ததில், 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்து சஞ்சய் ஷா உயிரிழந்தார். நிறுவனத்தின் தலைவர் விஸ்வநாத் ராஜ் பலத்த காயமடைந்தார். விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :