திமுக மாநாடு கலைஞரின் குடும்ப விழா - ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்

சேலத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு கலைஞரின் குடும்ப விழா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். ராமநாதபுரத்தில், அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேசிய உதயகுமார், அதிமுக பலவீனமாக இருப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை. ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவதுபோல உள்ளது. திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு கலைஞரின் குடும்ப விழாவாகவே நடக்கிறது என கூறினார். சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று திமுக இளைஞரணி மாநாட்டில் லட்சக்கணக்கில் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
Tags :