நாஞ்சில் சம்பத் மீது சட்ட நடவடிக்கை எடுக்ககோரி மதிமுகவினர் பரபரப்பு புகார்.

தென்காசி மாவட்டம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மதிமுகவை சேர்ந்த நோட்டரி வழக்கறிஞர் சுப்பையா சார்பில் அளிக்கப்பட்ட அந்த புகார் மனுவில்,மதிமுகவிலிருந்து 10வருடங்களுக்கு முன்பு வெளியேறிய நாஞ்சில் சம்பத் என்பவர் தற்போது சமூக வலைதளங்களில் மதிமுக தலைவர் வைகோ மீதும், திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ மீதும் அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றார். எனவே சட்ட ஒழுங்கை சீர்குலைக்க கூடிய வார்த்தைகளால் பேசி வரும் நாஞ்சில் சம்பத் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவதூறு கருத்துக்களை பரப்பி சமூக வலைதளங்களில் பதிவிட்ட வீடியோக்களை நீக்க வேண்டும் என மனு அளித்தாக தெரிவித்தனர்.
Tags : MDMK members file a sensational complaint demanding legal action against Nanjil Sampath.