38 ஆசிரியர்கள் கைது... சிஐடி ரிப்போர்ட்

by Staff / 20-10-2022 11:30:39am
38 ஆசிரியர்கள் கைது... சிஐடி ரிப்போர்ட்

கர்நாடகாவில் உள்ள பள்ளிகளில் 2ம் நிலை உதவி ஆசிரியர்கள் (2012-2013) மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் (2014-2015) பதவிக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இதுகுறித்து, விதான செளதா காவல்துறையினர் கடந்த ஆகஸ்டு மாதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விவகாரம் தொடர்ந்து பூதாகரமாக வெடித்ததால் காவல்துறையினரிடமிருந்து சி.ஐ,டியிடம் மாற்றப்பட்டது.

இந்தநிலையில், ஆசிரியர் பணி நியமன முறைகேடுகள் தொடர்பாக கர்நாடகாவில் 51 இடங்களில் 30 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தியதில் முறைகேடில் ஈடுபட்ட 38 ஆசிரியர்களை கர்நாடக சிஐடி நேற்று கைது செய்யப்பட்டதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மாவட்டங்களின் அடிப்படையில் அதிகபட்சமாக கோலார் மாவட்டத்தில் 24 ஆசிரியர்களும், பெங்களூர் தெற்கு மற்றும் சித்ரதுர்கா மாவட்டத்தில் தலா 5 ஆசிரியர்களும், சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் 4 ஆசிரியர்கள் என மொத்தம் 38 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo