விமானப்படை ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்

விமானப்படையின் அப்பாச்சி ஹெலிகாப்டர் மத்திய பிரதேச மாநிலம் பிந்த் என்ற இடத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கவனித்ததை அடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. வழக்கமான பயிற்சிப் பயணத்தின் போதுதான் ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு இருந்ததை விமானி கவனித்தார். பின்னர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிந்த் என்ற இடத்தில் அப்பாச்சி ஏஎச்-64 ஹெலிகாப்டர் தரையிறங்கியது. ஹெலிகாப்டர் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். தொழில்நுட்ப சிக்கலை தீர்க்க விமானப்படை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
Tags :