ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலி
ராஜஸ்தான் மாநிலம் ஷாபுரா பகுதியில் இன்று அதிகாலை பயங்கர விபத்து நடந்தது. ஜெய்ப்பூர்-டெல்லி நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து ஒன்று லாரியை முந்திச் செல்ல முயன்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டெல்லியைச் சேர்ந்த விஜய் அகர்வால் (40), அவரது மனைவி டினா அகர்வால் (36), அவர்களது மகன் பிரீதம் (16) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :