கர்நாடக சபாநாயகர் தேர்தல்.. காதர் வேட்புமனு தாக்கல்
கர்நாடகா சட்டப்பேரவை சபாநாயகருக்கான தேர்தலில் போட்டியிட யு.டி.காதர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் கடந்த 10ம் தேதி நடைபெற்று அதில் 135 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. இந்நிலையில், முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவகுமாரும் கடந்த சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர். இதனையடுத்து, கர்நாடக சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் யு.டி.காதர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மேலும், தட்சிண கன்னடா சட்டமன்ற உறுப்பினரான காதர் சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.
Tags :