அ.தி.மு.க கூட்டத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதல்

by Editor / 08-07-2022 09:16:34pm
அ.தி.மு.க கூட்டத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதல்

அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே நடந்து வரும் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.ராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் இன்று ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் நடந்தது.இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முனியசாமி  தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு அனைவரையும் அரவணைத்து செல்லும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் கழகத்தின் ஒற்றை தலைமையாக வரவேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் பேசினர். 

இதனால் இந்த கூட்டத்தில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நாற்காலிகளை எடுத்து வீசி ரகளையில் ஈடுபட்டனர். இந்த மோதலில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் அங்கிருந்த இருக்கைகளை கொண்டு அடித்து, ஒலிபெருக்கியை வீசி அடிதடியில் ஈடுபட்டனர்.நிர்வாகிகளுக்கு வழங்க வேண்டிய வடைகள் இருந்த தட்டுக்கள் பறந்தன.

இதில் முக்கிய நிர்வாகிகள் உட்பட்ட 3 பேர் காயமடைந்தனர். இருவருக்குகாயம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அதை தொடர்ந்து கூட்டம் மீண்டும் நடந்தது. இந்தச் சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
 

 

Tags : Clash between OPS-EPS supporters in ADMK meeting

Share via