விருதுநகரில் விடுதேடிச்செல்லும் அதிகாரிகள்...

by Editor / 15-06-2025 12:35:48am
விருதுநகரில் விடுதேடிச்செல்லும் அதிகாரிகள்...

பள்ளிக்கு வராமல் உள்ள 6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும்   இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து, மாணவர்களை மீண்டும் அழைத்து பள்ளியில் சேர்க்கும் முயற்சியாக விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திட்ட இயக்குநர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் மாணவர்களை நேரில் சென்று சந்தித்து, இடைநிற்றலுக்கான காரணங்கள், குறைகளை கேட்டறிந்து, மீண்டும்  பள்ளிப்படிப்பை தொடர்வதற்கான நடவடிக்கைகள் குறித்து  நேரடி கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு அலுவலர்களுக்கும் தனித்ததனியாக இடைநின்ற மாணவர்களின் விபரங்கள் கொடுக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் இடைநிற்றல் மாணவர்களை நேரில் சென்று சந்தித்து, பள்ளிப்படிப்பை தொடர்வதற்கான இந்த திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

Tags : விருதுநகரில் விடுதேடிச்செல்லும் அதிகாரிகள்...

Share via