விபத்தால் தடைப்பட்ட திருமணம்

by Editor / 09-09-2022 12:07:25pm
விபத்தால் தடைப்பட்ட திருமணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த 20 பேர், தண்ணீர் பந்தல் அருகே அமைந்துள்ள முருகர் கோவிலில் மாப்பிள்ளை ராமு பெண் உஷாராணி இருவருக்கும்  இன்று திருமணம் செய்ய திப்பம்பட்டி கிராமத்திலிருந்து இன்று காலை புறப்பட்டுச் சென்றனர்.

திப்பம்பட்டியில் இருந்து தண்ணீர் பந்தல் அமைந்துள்ள முருகர் கோவிலுக்கு செல்வதற்காக ஊத்தங்கரை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது
டாரஸ் லாரியை முந்தி செல்ல டிரைவர் முற்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

20 பேர் காயம் ஏற்பட்டது அடுத்து  இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த மல்லிப்பட்டியைச் சேர்ந்த சாந்தி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இச்சம்பவம் குறித்து ஊத்தங்கரை காவலர்களுக்கு தகவல் வந்ததை அடுத்து விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அரசு மருத்துவர்கள் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.

இந்த விபத்து குற்த்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிலுக்கு இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும் நிலையில் இந்த விபத்தால் திருமணம் நடைபெறததால் மணமகன் மணமகள் மற்றும் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது

 

Tags :

Share via