4 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வீடு கட்டி தரப்படும் என பரப்புரை

by Staff / 01-04-2024 02:16:40pm
4 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வீடு கட்டி தரப்படும் என பரப்புரை

சின்னாளப்பட்டியின் பூஞ்சோலை பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கூடியிருந்த நிலையில் பேசிய தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி " தமிழ்நாடு அரசாங்கம் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கிக் கொண்டிருக்கிறது. கிடைக்காதவர்களுக்கு மீண்டும் உரிமைத் தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 3500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஜாதி மதம் பார்ப்பதில்லை வீடு இல்லாத ஏழைகளுக்கு நிலம் இல்லாதவர்களுக்கு உடனடியாக நான்கு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடு கட்டிக் கொடுக்கப்படும். அதற்கான திட்டத்தை நான் ஆத்தூரில் தொடங்கி வைத்து விட்டேன்.கேஸ் சிலிண்டர் விலையை 500 ஆக குறைத்தும், பெட்ரோல் டீசல் விலையை 75 ரூபாய், 65 ரூபாய்க்கு குறைத்தும் வழங்க உள்ள அரசு இந்தியா கூட்டணி தலைமையில் அமையும் அரசு. சின்னாளப்பட்டியில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு, நவீன வசதிகளுடன் கூடிய 24 மணி நேரமும் கூடுதல் மருத்துவர்கள் கொண்டு செயல்படும் மருத்துவமனை கட்டமைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்வதற்கான சாலைகள் இருபுறமும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு விசாலமாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.

 

Tags :

Share via