“மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்”
திருவாரூர் மாவட்டம் எருக்காட்டூர் பகுதியில் உள்ள அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர் .இங்கு மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களில் 15 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது அதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கல்வி அலுவலர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட அதாவது காலாவதியாகிவிட்டதா அல்லது யாரேனும் ஏதும் கலந்துவிட்டார்களா என ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :