ராமேஸ்வரம் - அஜ்மீர் ஹம்சபார் ரயில் மீண்டும் இயக்கம்

by Editor / 15-12-2021 06:23:32pm
ராமேஸ்வரம் - அஜ்மீர் ஹம்சபார் ரயில் மீண்டும் இயக்கம்

 

ராமேஸ்வரம் - அஜ்மீர் ஹம்சபார் வாராந்திர விரைவு ரயில் ராமேஸ்வரத்திலிருந்து டிசம்பர் 21 முதல் மீண்டும் இயக்கப்பட இருக்கிறது. வண்டி எண் 20973 அஜ்மீர் - ராமேஸ்வரம் ஹம்சபார் வாராந்திர விரைவு ரயில் டிசம்பர் 18 முதல் அஜ்மீரிலிருந்து சனிக்கிழமைகளில் இரவு 08.10 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 20974 ராமேஸ்வரம் - அஜ்மீர் ஹம்சபார் வாராந்திர விரைவு ரயில் டிசம்பர் 21 முதல் ராமேஸ்வரத்திலிருந்து செவ்வாய்க்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு வியாழக் கிழமைகளில் இரவு 11.05 மணிக்கு அஜ்மீர் சென்று சேரும். இந்த ரயில்கள் மானாமதுரை, திருச்சி, அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை எழும்பூர், கூடுர், நெல்லூர், விஜயவாடா, வாரங்கல், பல்ஹார்ஷா, சந்திராபூர், நாக்பூர், பீட்டல், இட்டார்சி, போபால், தேவாஸ், லட்சுமிபாய் நகர், பதேஹாபாத், ரட்லம் மன்டசோர், நிமாச், சித்தூர்கார், பில்வாரா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

 

Tags :

Share via

More stories