3 நாட்களுக்கு தொட்டபெட்டா காட்சி முனை மூடல் வனத்துறையினர் அறிவிப்பு.

by Editor / 20-08-2024 09:45:20am
3 நாட்களுக்கு தொட்டபெட்டா காட்சி முனை மூடல் வனத்துறையினர் அறிவிப்பு.

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளது இந்நிலையில் உள்ளூர் மற்றும் இன்றி வெளி மாவட்ட மாநில மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இதமான காலநிலையும் பச்சை பசேல் என்று காட்சியளிக்கும் மலைகளையும் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா நீர்வீழ்ச்சி , படகு இல்லம்,தேயிலை பூங்கா போன்ற சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து அனுபவிக்க நீலகிரி மாவட்டத்திற்கு படையெடுத்து வருகின்றனர் 

இந்நிலையில் உதகை தொட்டபெட்டா காட்சி முனை பராமரிப்பு பணிகளுக்காக இன்று முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக நீலகிரி மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 

Tags : 3 நாட்களுக்கு தொட்டபெட்டா காட்சி முனை மூடல் வனத்துறையினர் அறிவிப்பு.

Share via