உள்ளாட்சித் தேர்தலில் உமா சங்கர் ஐ.ஏ.எஸ்-ஸின் தங்கை வெற்றி

by Editor / 13-10-2021 06:10:42pm
உள்ளாட்சித் தேர்தலில் உமா சங்கர் ஐ.ஏ.எஸ்-ஸின் தங்கை வெற்றி

நெல்லை மாவட்டம் மானூர் யூனியனுக்கு உட்பட்ட 5-வது வார்டில் தி.மு.க, பா.ஜ.க, அ.ம.மு.க என அரசியல் பிரதான கட்சிகளும், இரு சுயேச்சைகளும் போட்டியிட்டனர்.


இந்த வார்டுக்கான தேர்தலில் போட்டியிட்ட உமாதேவி என்ற சுயேச்சை வேட்பாளர், ஐ.ஏ.எஸ் அதிகாரியான உமா சங்கரின் உடன்பிறந்த தங்கை. மேல இலந்தைக்குளம், பன்னீரூத்து, சுண்டங்குறிச்சி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய வார்டில் அவர் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில், உமாதேவிக்கு 2,219 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்களில் தி.மு.க வேட்பாளரான முருகேஸ்வரி என்பவர் 1,218 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். அதனால் சுயேச்சை வேட்பாளரான உமாதேவி 1,001 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

 

Tags :

Share via

More stories

Logo