மேற்குவங்கத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம்தோறும் 3,000 ரூபாய் நிதி உதவி- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

by Admin / 11-04-2026 10:14:13am
மேற்குவங்கத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம்தோறும் 3,000 ரூபாய் நிதி உதவி- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

நேற்று மேற்குவங்க மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை சங்கல்ப த்ரா வெளியிட்டார். இத்தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதிகளாக -

பாஜக ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் மாநிலம் முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் குடும்பத் தலைவிகள் மற்றும் பெண்களுக்கு மாதம்தோறும் 3,000 ரூபாய் நிதி உதவி நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்என்றும்

 அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் இளைஞர்களுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்புகள் மற்றும் சுய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும்

வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம்தோறும் 3,000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என்றும்

சட்டவிரோதமாக ஊடுருவியவர்களை கண்டறிந்து வெளியேற்ற கண்டறிதல் நீக்குதல் மற்றும் நாடு கடத்துதல் கொள்கை பின்பற்றப்படும் என்றும்

ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைகள் 45 நாட்களுக்குள் அமுத்து படுத்தப்படும் மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உறுதி செய்யப்படும் என்றும்

நெல் கொள்முதல் விலை ஒரு குவிண்டாலுக்கு 3,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும்

மாநில அரசு பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அறிக்கையில் முதன்மையான வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via
Logo