2022ஆம் ஆண்டின் வடகிழக்குப் பருவமழை. இயல்பான அளவிற்கே மழை பொழிந்துள்ளது. 

by Editor / 03-01-2023 11:04:57pm
2022ஆம் ஆண்டின் வடகிழக்குப் பருவமழை.  இயல்பான அளவிற்கே மழை பொழிந்துள்ளது. 

2022ஆம் ஆண்டின் வடகிழக்குப் பருவமழை ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது. இனி தமிழக்ம், புதுச்சேரியில் மழைக்கான வாய்ப்பு மிகக் குறைவு. 
இந்த வடகிழக்குப் பருவமழைக் கால தொடக்கத்தில் இந்திய வானிலை ஆய்வுத்துறை தமிழகம் புதுச்சேரியில் இயல்பான மழை பெய்யும் எனக் கூறியிருந்தது. அதன்படி இயல்பான அளவிற்கே மழை பொழிந்துள்ளது. 
நான் என்னுடைய வானிலை அறிக்கைகளில் வடகிழக்குப் பருவமழை இயல்பை ஒட்டியே இருக்கும்; நவம்பரில் இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகலாம் எனத் தெரிவித்திருந்தன. 
தமிழகம், புதுச்சேரியில் 2022ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மழையானது இயல்பைவிட ஒரு விழுக்காடு அதிகமாகப் பெய்துள்ளது. மாவட்ட வாரியாக விவரங்கள்
(1) இயல்பைவிடக் குறைவான மழை (-20% முதல் -59% வரை) பெய்துள்ள மாவட்டங்கள் :- 
திருவாரூர் -33, நாகைப்பட்டினம் -32, காரைக்கால் -30, தூத்துக்குடி -30, இராமநாதபுரம் -28, திருச்சி -23, அரியலூர் -21, புதுச்சேரி -20
(2) இயல்பான மழை (+19% முதல் -19% வரை) பெய்துள்ள மாவட்டங்கள் 
திருநெல்வேலி -19, தஞ்சாவூர் -19, புதுக்கோட்டை -19, கள்ளக்குறிச்சி – 18, பெரம்பலூர் -16, கடலூர் – 13, நீலகிரி -13, வேலூர் -12, தென்காசி -10, சிவகங்கை -9, விழுப்புரம் -9, கன்னியாகுமரி 2, கரூர் 3, செங்கல்பட்டு 4, விருதுநகர் 4, மயிலாடுதுரை 5, இராணிப்பேட்டை 9, சேலம் 9, திருவண்ணாமலை 11, சென்னை 14, திருவள்ளூர் 15, தேனி 15, தர்மபுரி 16, மதுரை 18, திண்டுக்கல் 19
(3) இயல்பைவிட அதிகமான மழை (20% முதல் 59% வரை) பெய்துள்ள மாவட்டங்கள்
திருப்பூர் 28, காஞ்சிபுரம் 35, கிருஷ்ணகிரி 37, கோயம்புத்தூர் 38, நாமக்கல் 40, திருப்பத்தூர் 55, ஈரோடு 58

 

Tags :

Share via