மதுரை - தேனி - மதுரை ரயில்கள் கால அட்டவணையில் ஜூன் 1 முதல் மாற்றம்
மதுரை - தேனி ரயில் கால அட்டவணை மாற்றம்
மதுரை - தேனி - மதுரை ரயில்கள் கால அட்டவணையில் ஜூன் 1 முதல் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரை - தேனி முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் (06701) மதுரையில் இருந்து காலை 08.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 25 நிமிடங்கள் முன்னதாக காலை 08.05 மணிக்கு புறப்பட்டு காலை 09.35 மணிக்கு தேனி சென்று சேரும். மறு மார்க்கத்தில் தேனி - மதுரை முன்பதில்லாத விரைவு சிறப்பு ரயில் (06702) தேனியில் இருந்து மாலை 06.15 மணிக்கு புறப்பட்டு வழக்கமான வருகை நேரமான இரவு 07.35 மணிக்கு பதிலாக இரவு 07.50 மணிக்கு மதுரை வந்து சேரும்.
Tags : Madurai - Theni - Madurai trains will be rescheduled from June 1