விஷம் குடித்து கணவன்-மனைவி தற்கொலை

கொளத்தூரை அடுத்த கோவிந்தபாடி அருகே உள்ள குள்ள வீரன்பட்டியை சேர்ந்தவர் ராஜா(46). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. கல் உடைக்கும் தொழிலாளியான இவருக்கு சரஸ்வதி (36). என்ற மனைவியும், ரஞ்சித் என்ற மகனும், நந்தினி, அஞ்சலி ஆகிய 2 மகள்களும் இருந்தனர். இவர்களில் நந்தினிக்கு திருமணமாகி கர்நாடக மாநிலத்தில் வசித்து வருகிறார். ரஞ்சித் கிரேன் ஆபரேட்டராக வெளியூரில் பணியாற்றி வருகிறார். அஞ்சலி கொளத்தூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வருகிறார். ராஜா குடும்பத்துடன் கொளத்தூர் மின்வாரிய அலுவலகம் அருகில் வசித்து வந்தார்.இந்தநிலையில் நேற்று மாலை அஞ்சலி பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டில் தந்தை ராஜா, தாயார் சரஸ்வதி ஆகியோர் விஷம் குடித்து இறந்து கிடந்ததை கண்டு அவர் கதறி துடித்தார். மாணவியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். அருகில் சாணி பவுடர், டம்ளர் இருந்தது.இதனால் கணவன்-மனைவி 2 பேரும் விஷம் (சாணிபவுடர்) கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து கொளத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மரியமுத்து, கொளத்தூர் இன்ஸ்பெக்டர் கனகரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
Tags :