தங்கம் விலை ஏற்றத்தோடு துவங்கியது திங்கள்.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறியுள்ளது.உலக பொருளாதார நெருக்கடி, போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்கள் தற்காலிகமாக இல்லாததால் பங்குச்சந்தை மீண்டும் பழைய நிலைக்கே திரும்பியுள்ளது. இதனால் தங்கம் விலையும், சற்று குறைந்தது.கடந்த சனிக்கிழமை (மே 17) தங்கம் விலையில் மாற்றம் ஏதுமில்லாமல், 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 8,720க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 69,760க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில், இன்று (மே 19) தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,755க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.70,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது..
Tags : தங்கம் விலை ஏற்றத்தோடு துவங்கியது திங்கள்.