பேருந்து விபத்து.. 30 பேர் காயம்

கேரளாவின் திருச்சூர் மாவட்டம் கனிமங்கலம் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பேர் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களை கேரள வருவாய்த்துறை அமைச்சர் பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags :