4ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழகம்

by Staff / 25-03-2022 05:12:04pm
 4ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழகம்

சர்வதேச அரங்கில் வலிமைமிக்க ஏற்றுமதியாளராக விளங்கும் அதிக சாத்தியக் கூறுகளை இந்தியப் பொருளாதாரம் கொண்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றுமதி மிக சிறந்த பங்காற்றி வரும் நிலையில் அதனை ஊக்குவிக்கவும் அபிவிருத்தி செய்யவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

மாநிலங்களின் ஏற்றுமதி சாத்தியங்களையும், திறன்களையும் மதிப்பிடும் வகையில் ஆண்டுதோறும் ஏற்றுமதி வளர்ச்சி குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது.கட்டமைப்பு- கொள்கை; வர்த்தகச் சூழல்; ஏற்றுமதிச் சூழல்; ஏற்றுமதிச் செயல்பாடுகள் ஆகிய நன்கினை அடிப்படையாக கொண்டு ஏற்றுமதி வளர்ச்சி குறியீடு வெளியிடப்படுகிறது.

அதன்படி 2020-21 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி வளர்ச்சி குறியீடு தற்போது வெளியாகியுள்ளது. இதில் தமிழகம் 4 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஏற்றுமதியில் 3ம் இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. குஜராத் முதலிடத்தையும், மகாராஷ்டிரா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.  இதில் 2020 ஆம் ஆண்டு 9ம் இடத்தில் இருந்த கர்நாடகா 3ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அண்டை மாநிலமான கேரளா 16 ஆம் இடத்திலும் தலைநகரான டெல்லி 12 ஆம் இடத்திலும் உள்ளன. 
 

 

Tags :

Share via