by Staff /
10-07-2023
04:27:26pm
இன்றைய காலகட்டத்தில் இளம் வயதிலேயே பலரும் மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். அவ்வாறு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில், தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். காங்கிரஸ் தலைவர் ராதா கிஷோரின் மகன் ஸ்ரீதர் இன்று காலை உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுள்ளார். ஜிம்மில் இருந்து வீடு திரும்பிய சிறிது நேரத்தில் மாரடைப்பால் சரிந்து விழுந்தார். உடனடியாக அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்தார்.
Tags :
Share via