வேதி பொருட்கள் சேர்க்கப்படாத 500 மி.லி ஆவின் பால்.
தமிழக அரசின் ஆவின் நிறுவனம் ‘டிலைட்’ என்ற 3 மாதங்கள் வரை பயன்படுத்தும் பசும்பால் பாக்கெட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த பாடலை குளிர்தான வசதியின்றி 90 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் என கூறியுள்ளது. இதன் 500 மி.லி பாக்கெட்டின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.30க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த பால் பொருட்கள் எந்த வித வேதி பொருட்களும் சேர்க்கப்படாமல் நவீன தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :