by Staff /
04-07-2023
02:00:42pm
சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கர்நாடகா அரசு வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட கர்நாடகா அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் கிரண் எஸ். ஜவாலி நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் எழுதியுள்ள கடிதத்தில், 30 கிலோ தங்க நகைகள், வைர நகைகள், கடிகாரம், 11 ஆயிரம் புடவைகள், பரிசு பொருட்கள், உபகரணங்கள் உள்ளிட்ட 28 வகையான பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
Tags :
Share via