51ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக இயக்கப்பட்ட அரசு பேருந்து

by Staff / 23-08-2024 03:48:12pm
51ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக இயக்கப்பட்ட அரசு பேருந்து

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சைபன் புதூர் கிராமமானது சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாய கூலித்தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் கடந்த 1973ம் ஆண்டு அரசு பள்ளி தொடங்கப்பட்டது.

இங்கு சைபன்புதூரில் இருந்து மட்டுமின்றி வரப்பள்ளம், காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மணவிகள் படித்து வந்தனர். தொடக்கப்பள்ளி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது வேறு வழித்தடங்களில் இயங்கும் பேருந்துகளில் காலை மற்றும் மாலை நேரத்தில் மாணவ, மாணவிகள் பள்ளி செல்லும் நேரம் மற்றும் மாலை வீடு திரும்பும் நேரத்தில் பேருந்துகளை இயக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அங்கு ஆய்வு செய்த அதிகாரிகள் நாள்தோறும் காலையில் அத்தாணியில் இருந்து கள்ளிப்பட்டி வழியாக கோபி செல்லும் பேருந்து ஒன்றையும், கள்ளிப்பட்டி வழியாக அத்தாணி செல்லும் பேருந்து ஒன்றையும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி வரை இயக்கவும், வழித்தடத்தை நீட்டித்து உத்தரவிட்டனர். 51 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக இயக்கப்பட்ட இரு  பேருந்துகளில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். இதனால் உற்சாகத்துடன் மாணவ மாணவிகள் நடத்துனர் ஓட்டுனருக்கு சால்வே அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

 

Tags :

Share via