7 குழந்தைகள் பலி - சட்டவிரோதமாக ஆக்சிஜன் நிரப்பியதே காரணம்

by Staff / 28-05-2024 12:05:27pm
7 குழந்தைகள் பலி - சட்டவிரோதமாக ஆக்சிஜன் நிரப்பியதே காரணம்

டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7 குழந்தைகள் பலியானதற்கு சட்டவிரோதமாக ஆக்சிஜன் நிரப்பியதே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் (25.05.20 24) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது மருத்துவமனையில் இருந்த 12 குழந்தைகள் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 7 குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தீயை அணைக்கும் கருவிகள் இல்லாததும், அவசரகால வெளியேற்றங்கள் இல்லாததையும் விசாரணை குழு கண்டறிந்தது.

 

Tags :

Share via

More stories

Logo