சதுரகிரி மலையில் நவராத்திரி திருவிழா- 5ம் தேதி வரை தரிசனம் செய்ய அனுமதி

by Editor / 27-09-2022 09:26:55am
சதுரகிரி மலையில் நவராத்திரி திருவிழா-  5ம் தேதி வரை  தரிசனம் செய்ய அனுமதி

சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி, பிலாவடி கருப்பசாமி, ஆனந்தவல்லி அம்மன் கோவில்கள் உள்ளன. இங்குள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு நவராத்திரி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா நேற்று காலை 5 மணிக்கு காப்பு கட்டு வைபவத்துடன் தொடங்கியது. வரும் 4ம் தேதி இரவு 7 மணிக்கு சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பஜனை வழிபாடு நடைபெற உள்ளது. 5ம் தேதியன்று விஜயதசமியை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மனுக்கு மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பின் அம்பு எய்து அரக்கனை அழிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. வருகிற 5ம் தேதி வரை தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இரவில் கோவிலில் தங்க அனுமதி கிடையாது. கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கு அனுமதி கிடையாது.மழை பெய்யும் நாட்களில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நவராத்திரி திருவிழாவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி

 

Tags : சதுரகிரி மலையில் நவராத்திரி திருவிழா

Share via