திமுகவை விமர்சித்த ஒன்றிய அமைச்சரின் உருவ பொம்மை எரிப்பு

தமிழ்நாடு மக்களையும், தமிழ்நாடு அரசையும் அவமதிக்கும் வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், தர்மேந்திர பிரதானை கண்டித்து, சைதப்பேட்டை அருகே அவரது உருவ பொம்மையை, திமுகவினர் எரித்தனர். முன்னதாக, நாடாளுமன்றத்தில் பேசிய ஒன்றிய அமைச்சர், ‘திமுகவினர் நாகரீகமற்றவர்கள்’ என கூறினார். இதனை கண்டித்து திமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனதை கண்டனத்தை பதிவு செய்தார்.
Tags :