ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இன்று
அதிகாலை 5.10 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது. இதில், உயிர்ச்சேதங்கள் மற்றும் உடைமைகள் பற்றிய விபரங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. ஹெராத் நகரிலிருந்து 29 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. மேலும், 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏற்கனவே 4 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags :