ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்விக்கு இபிஎஸ்தான் காரணம் ஓபிஎஸ்

by Staff / 03-03-2023 04:40:21pm
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்விக்கு இபிஎஸ்தான் காரணம் ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  அதிமுக சார்பில் போட்டியிட்ட  தென்னரசு 43,981 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தார். இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “அதிமுகவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற ஜெயலலிதாவின் புகழுக்கு பங்கம் ஏற்படும் வகையில் அண்மையில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு அமைந்துள்ளது. இந்தத் தோல்வி ஒவ்வொரு தொண்டனையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் ஓர் இடைத்தேர்தலில் அதிமுக கிட்டத்தட்ட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது இந்த இடைத்தேர்தல்தான். இதற்கு காரணம் துரோகியும் துரோகியின் தலைமையிலான ஓர் சர்வாதிகார கூட்டமும் தான். இரட்டை இலை சின்னம் பெறப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக அமைதி காத்த நிலையில், அதிமுக ஈரோடு தேர்தலில் படுதோல்வி அடைந்து இருக்கிறது என்றால் அதற்கு முழுக் காரணம் எடப்பாடி பழனிசாமி என்ற நம்பிக்கை துரோகியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான்” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via