போலீசார் மீது கிராம மக்கள் கற்களை வீசி தாக்குதல்

by Staff / 12-01-2024 05:17:50pm
போலீசார் மீது கிராம மக்கள் கற்களை வீசி தாக்குதல்

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் உள்ள லால்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிரிபாலு என்ற மூதாட்டி சாலையைக் கடக்கும்போது, ​​அவர் மீது கார் மோதியது. இந்த விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார். இதனால், கிராம மக்கள், சடலத்தை சாலையில் வைத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, போலீசருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் போலீசார் மீது கிராம மக்கள் கற்களை வீசி தாக்கினர். கல் வீச்சில் லால்கஞ்ச் சிஓ ராம்சுரத் சோன்கர் உட்பட 3 போலீசார் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via