தென்காசியில் முதியோர் காப்பகத்திற்கு சீல் வைத்து கோட்டாட்சியர் நடவடிக்கை.

by Staff / 12-06-2025 11:08:56pm
தென்காசியில் முதியோர் காப்பகத்திற்கு சீல் வைத்து கோட்டாட்சியர் நடவடிக்கை.

காப்பகத்தில் சாப்பிட்ட உணவு நஞ்சாக மாறிய நிலையில் 3 பேர் உயிரிழந்ததும், அடுத்தடுத்து 50 நபர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில்

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகே அன்னை முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லத்தில் ஆண்கள், பெண்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் முதியோர் இல்லத்தில் கடந்த நாளில் இறைச்சி சாப்பிட்டதாக கூறப்பட்ட நிலையில் இதில் சில நபர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. இந்த உடல் உபாதை காரணமாக நேற்று ஆண்கள், பெண்கள் உட்பட 11 நபர்கள் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சாப்பிட்ட உணவு நஞ்சாக மாறிய நிலையில்  சங்கர், அம்பிகா மற்றும் முருகம்மாள் என்ற மூன்று நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து முதியோர்  காப்பகத்தில் சாப்பிட்ட உணவு புட் பாய்சனாக ஏற்பட்ட விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து முதியோர் காப்பகத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் கோட்டாட்சியர் லாவண்யா நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து மேலும் காப்பகத்தில் வசித்து வரக்கூடிய முதியவர்கள் அந்த உணவை சாப்பிட்டதாக தெரிய வந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காப்பகத்தில் இருந்த அனைவரையும் ஐந்திற்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலமாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் அரசு மருத்துவமனையில் அவசர பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சைகளை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் லாவண்யா முதற்கட்ட விசாரணையை அடுத்து காப்பகத்திற்கு சீல் வைத்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் முதியோர் காப்பகத்தில் சாப்பிட்ட உணவு நஞ்சாக மாறிய நிலையில் மூன்று பேர் உயிரிழந்ததும் அடுத்தடுத்து நபர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தென்காசியில் முதியோர் காப்பகத்தில் சாப்பிட்ட உணவு நஞ்சாக மாறிய நிலையில் 3 பேர் உயிரிழந்ததும், அடுத்தடுத்து 50 நபர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் காப்பகத்திற்கு சீல் வைத்து கோட்டாட்சியர் நடவடிக்கை.

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகே அன்னை முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லத்தில் ஆண்கள், பெண்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் முதியோர் இல்லத்தில் கடந்த நாளில் இறைச்சி சாப்பிட்டதாக கூறப்பட்ட நிலையில் இதில் சில நபர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. இந்த உடல் உபாதை காரணமாக நேற்று ஆண்கள், பெண்கள் உட்பட 11 நபர்கள் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சாப்பிட்ட உணவு நஞ்சாக மாறிய நிலையில்  சங்கர், அம்பிகா மற்றும் முருகம்மாள் என்ற மூன்று நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து முதியோர்  காப்பகத்தில் சாப்பிட்ட உணவு புட் பாய்சனாக ஏற்பட்ட விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து முதியோர் காப்பகத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் கோட்டாட்சியர் லாவண்யா நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து மேலும் காப்பகத்தில் வசித்து வரக்கூடிய முதியவர்கள் அந்த உணவை சாப்பிட்டதாக தெரிய வந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காப்பகத்தில் இருந்த அனைவரையும் ஐந்திற்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலமாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இதில் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் அரசு மருத்துவமனையில் அவசர பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சைகளை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் லாவண்யா முதற்கட்ட விசாரணையை அடுத்து காப்பகத்திற்கு சீல் வைத்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் முதியோர் காப்பகத்தில் சாப்பிட்ட உணவு நஞ்சாக மாறிய நிலையில் மூன்று பேர் உயிரிழந்ததும் அடுத்தடுத்து நபர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags : தென்காசியில் முதியோர் காப்பகத்திற்கு சீல் வைத்து கோட்டாட்சியர் நடவடிக்கை.

Share via