தமிழகத்தில் 24மணி நேர விளம்பர ஆட்சி- பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி.

தமிழகத்தில் 24மணி நேர விளம்பர ஆட்சி நடைபெற்று வருவதாகவும், அதிமுக தலைமையிலான கூட்டணி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் என்பதால் அதிமுக-பாஜக இடையே குழப்பத்தை ஏற்படுத்த சில முயற்சிப்பதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி பேட்டி
மத்திய பாஜக அரசின் 11 ஆண்டுகால சாதனைகளை விளக்கி மக்களுக்கு கூறுகின்ற வகையில் தென்காசி மாவட்டத்தில் மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி ஏற்பாட்டில் பாஜகவை சேர்ந்த நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி செய்தியாளர் சந்தித்தார்.
பாஜக தொடர்ந்து மக்களுக்கு தேவையான அனைத்து விதமான நல்லாட்சிகளையும், ஏழை மக்களுக்கு தேவையான அனைத்து விதமான திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தி வருகிறது எனக்கு கூறினார்.
தொடர்ந்து தமிழகத்தைப் பொறுத்தவரை 24 மணி நேர விளம்பர ஆட்சியாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த ஆட்சியாகவும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணி வலுவாக உள்ள நிலையில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருகின்றனர். அதிமுக, பாஜக கூட்டணியுடன் மேலும் பல்வேறு கட்சிகள் இணைய உள்ளது. அந்த வகையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.
Tags : தமிழகத்தில் 24மணி நேர விளம்பர ஆட்சி- பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி.