மதுபோதையில் 3 பேர் கார் ஏற்றி கொல்லப்பட்ட கொடூரம்

by Editor / 08-04-2025 03:45:37pm
மதுபோதையில் 3 பேர் கார் ஏற்றி கொல்லப்பட்ட கொடூரம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் நிர்வாகி மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நகர்கர்க் பகுதியில் உள்ள தெருவில் உஸ்மான் கான் என்பவர், மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி பெரும் விபத்தை ஏற்படுத்தினார். இக்கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via