தென்காசி முதியோர் இல்லத்தில் உணவருந்திய சம்பவத்தில் மேலும் ஒருவர் பலி.

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் உள்ள அன்னை முதியோர் இல்லத்தில் உணவருந்திய மூன்று பேர் முன்னதாக உயிரிழந்த நிலையில், தற்போது மதுரை பகுதியை சேர்ந்த தனலட்சுமி வயது (80) என்ற மூதாட்டியும் சிகிச்சை பலனளிக்காமல் அதிகாலை 2 மணி அளவில் உயிரிழந்துள்ளார்.
குறிப்பாக, இந்த முகாமில் இருந்த 59 பேரில் 3 பேர் நேற்றைய தினம் உயிரிழந்த நிலையில், 56 பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு பெண் பலியாகி உள்ள நிலையில், பலி எண்ணிக்கை 4 ஆக தற்போது உயர்ந்துள்ளது. குறிப்பாக, அன்னை முதியோர் இல்லத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்த நிலையில், தற்போது அந்த முகாமில் இருந்த அனைவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது வரை 4 பேர் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : தென்காசி முதியோர் இல்லத்தில் உணவருந்திய சம்பவத்தில் மேலும் ஒருவர் பலி.