புதுக்கடையில் புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

by Editor / 26-06-2025 05:29:05pm
புதுக்கடையில் புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

இனயம் திருப்பு என்ற பகுதியில் புதுக்கடை போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு நின்ற 2 பேரிடம் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 14.5 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் மேக்காமண்டபம் பகுதியைச் சேர்ந்த ஜெரின் ஜேக்கப் (29), தேங்காபட்டணம் பகுதி எட்வர்ட் ஜார்ஜ் (63) என்பது தெரிய வந்தது. இவர்கள் அந்தப் பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகளில் விற்பனைக்காக விநியோகம் செய்ய புகையிலை பொருட்களை கொண்டு வந்தது தெரிந்தது. போலீசார் 2 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

 

Tags :

Share via