தென்காசி வேப்பமரத்தில் வடியும் பால்-பக்திபரவசமடைந்த மக்கள்.

தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரிஅருகில் உள்ள பாட்டப்பத்து கிராமத்தில் சாலையில் மெயின் ரோட்டில் ஒரு வேப்பமரம் உள்ளது இன்று மாலை திடீரெனஅந்த வேப்பமரத்திலிருந்து ஏராளமான அளவு பால் வடியத் தொடங்கியது இதனை கண்டு அந்தபகுதி மக்கள் அதிசயமாக அந்த வேப்பமரத்திற்கு அருகில் சென்று பார்த்தனர் மேலும் சிலர் வேப்பமரத்திலிருந்து வடியும் பாலை பிடித்து குடித்து அது இனிப்பதாகவும் தெரிவித்தனர் வேப்ப மரத்தில் பால் வடிவதை ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்து சென்ற வண்ணம் உள்ளனர்.மேலும் பால் வடிந்த வேப்ப மரத்திற்கு மாலையிட்டு சந்தனம் குங்குமம் வைத்து வழிபட தொடங்கிய பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags : தென்காசி வேப்பமரத்தில் வடியும் பால்-பக்திபரவசமடைந்த மக்கள்.