சென்னையில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

by Staff / 04-12-2023 04:22:11pm
சென்னையில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு தொடங்கிய கனமழை, தற்போது வரை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில் சாலையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த பிரகாசம் (55) என்பவர் காய்கறி வாங்குவதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று இரவு வரை கனமழை பெய்யக்கூடும். பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo