ஆசிரியரை வெட்டிய மாணவர்கள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசுப் பள்ளி ஆசிரியரை மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தங்கல் எஸ்.ஆர்.என். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொருளாதாரத் துறை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் கடற்கரை (42). இவர் 11ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களைப் படிக்கச் சொல்லி கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இரண்டு மாணவர்களும் ஆசிரியரை அரிவாளால் வெட்டியுள்ளனர். மாணவர்கள் தப்பியோடிய நிலையில், அவர்களைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Tags :